கேள்வி :
சிலர் வெள்ளிக்கிழமை இரவில் விஷே‘டமாக இரவுத் தொழுகையைத் தொழுது அன்றைய தினம் நோன்பும் நோற்கின்றார்கள். இவ்வாறு வெள்ளிக்கிழமைக்கும் அதன் இரவுக்கும் இஸ்லாத்தில் ஏதும் சிறப்புக்கள் வந்துள்ளதா?
பதில் :
வெள்ளிக்கிழமைக்கும் அதன் இரவுக்கும் தனிச் சிறப்புக்கள் வந்துள்ளன. அந்த நாள் முஸ்லிம்களுக்கு ''திருநாள்”” என்றும் ஹதீஸில் வந்துள்ளது. ஆனால் அந்த இரவில் விஷேடமாக தொழுதல், அந்த நாளில் விஷேடமாக நோன்பு நோற்றல் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளன. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''ஏனைய இரவுகளுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை இரவை
விஷே‘டமாக தொழுகைக்குரியதாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். மேலும் ஏனைய நாட்களுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமையை நோன்பு நோற்பதற்காக வேண்டி ஆக்கிக் கொள்ளாதீர்கள். வழமையாக அந்த நாளில் நோன்பு நோற்று வந்தாலே தவிர.”” ( ஸஹீஹ் முஸ்லிம் ) மேலும் திர்மிதியில் வந்துள்ள ஹதீஸில் : ''வெள்ளிக்கிழமையில் நோன்பு நோற்காதீர்கள். அதற்கு முன் (வியாழன்) அல்லது அதற்குப் பின் (சனி)வரும் நாட்களில் நோன்பு பிடிப்பதாக இருந்தாலே தவிர?”” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில் ஈடுபடுவதையும் அந்நாளில் மட்டும் விஷேடமாக நோன்பு பிடிப்பதையும் முஸ்லிம்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும். இந்த ஹதீஸ்களில் வந்துள்ள தடையை ''மக்ரூஹ்தானே”” என்று நினைத்து அல்லாஹ்வின் தூதர் தடுத்ததை அதாவது ஹராமான விடயத்தில் ஈடுபட்டு விடாது கவனமாக இருக்க வேண்டும்.