நின்ற வன்னம் அருந்தலாமா? Posted on : 2014-02-17 Print

கேள்வி :
தண்ணீர் மற்றும் பானங்கள் எதனையும் நின்றவண்ணம் அருந்தக் கூடாது. அப்படி நின்றவண்ணம் அருந்துவது ''ஹராம்’’ என்று சிலரும், அது வெறுமனே ''மக்ரூஹ்’’ என்று சிலரும் கூறக் கேட்கின்றோம். இந்த விடயத்தில் இஸ்லாத்தின் சரியான தீர்ப்பு என்ன?
 
 
 
பதில் :  
 ''அவர் அப்படிக் கூறுகிறார் இவர் இப்படிக் கூறுகிறார்’’ என்று நாம் அதைக் கேட்டு, அதை மார்க்கமாக்குவதை தவிர்ந்து அல்லாஹ் என்ன கூறுகின்றான் அவனுடைய தூதர் என்ன கூறுகிறார்கள்’’ என்பதை நாம் நன்கு கவனித்து அதன்படி நடப்பதே எங்கள் கடமையாகும்.
 
அந்த அடிப்படையில் நின்றவண்ணம் அருந்துவது, பருகுவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒரு விடயமாகும். தடுக்கப்பட்டவைகளை அறபியில் ''ஹராம்’’ என்று சொல்லப்படும். இது சம்பந்தமாக வந்துள்ள ஹதீஸ்கள் 'தடுக்கப்பட்டுள்ளது’’ என்பதையே சுட்டிக் காட்டுகின்றன. எனவே நின்றவண்ணம் அருந்துவது ''மக்ரூஹ்’’ என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை.
 
 இது தடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் பின்வருமாறு :
 
அ)    அனஸ் ரழி.. அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
          நின்ற வண்ணம் அருந்துவதை நபி ஸல்...  அவர;கள் தடுத்தார்கள்.              (ஸஹீஹ் முஸ்லிம்)
 
ஆ)    அபூஹுரைரா ரழி..... அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
           உங்களில் எவரும் நின்றவண்ணம் அருந்த வேண்டாம். எவராவது மறந்த நிலையில் (நின்றவாறு                          அருந்திவிட்டால்) அதை வாந்தி எடுத்துவிடவும்.        (ஸஹீஹ் முஸ்லிம்)
 
இ)    ஒரு மனிதர் நின்றவண்ணம் குடிப்பதைக் கண்ட நபி ஸல்  அவர்கள், அம்மனிதரிடம், ''உன்னோடு ஒரு               பூனையும் சேர;ந்து தண்ணீர் அருந்துவதை விரும்புவாயா?’’ என்று கேட்டார;கள். அதற்கு அந்த மனிதர்               ''இல்லை’’ என்று கூறினார் அப்போது நபி ஸல்... அவர்கள் ''பூனையை விட மோசமான ஷைத்தான்                         (சற்றுமுன்) உன்னுடன் குடித்தான்’’என்று கூறினார்கள்.
          (அஹ்மத் - ஸஹீஹ் )
 
ஈ)    நின்றவண்ணம் குடிப்பவர் தன் வயிற்றில் ஏற்படுவதை (கெடுதியை) அறிந்தால் (நின்ற வண்ணம் குடித்த)           அதை வாந்தி எடுத்து விடுவார் என நபி ஸல்.... அவர்கள் கூறினார்கள்.  
        ( அஹ்மத் - ஸஹீஹ் )
 
மேற்கூறப்பட்டுள்ள நபி மொழிகள் மிகத் தெளிவாக ''நின்றவண்ணம் குடிப்பது ஹராம்’’ என்று கூறிக் கொண்டிருக்க, ''இல்லை, இது மக்ரூஹ்தான்’’ என்று கூறுபவர்கள் சற்று அல்லாஹ்வின் தண்டனையை பயப்பட வேண்டும்