கேள்வி :
இந்த ஹதீஸ் ஹதீஸ்கலை விதிகளுக்கு அமைவுற்ற சஹீஹான நபி மொழியா ?
பதில் :
இந்த ஹதீஸை சரிகண்ட ஹதீஸ்கலை அறிஞ்சர்களில் பத்து நபர்களின் பெயர் பட்டியலைத் தருகின்றேன்.
01. இமாம் ஹாகிம் - ஸஹீஹ் என்கிறார்.
02. இமாம் தஹபி - சரி காண்கிறார்.
03. ஹாபில் இப்னு ஹஜர் - ஹஸண் என்கிறார்.
04. அஹ் ஹாபில் இப்னு கதீர் - எக்குறையும் கூறாது, இதி உறுதிப்படுத்தும் வகையில், இது பல
வழிகளிலும் வந்துள்ளது என்கிறார்.
05. ஷைஹுள் இஸ்லாம் இப்னு தைமிய்யா - இது பிரபல்யமான ஸஹீஹான ஹதீஸ் என்கிறார்.
06. இமாம் ஷாதிபி - ஸஹீஹ் என்கிறார்.
07. அல் ஹாபில் அல் இறாகி - இதன் அறிவிப்பாளர் "ஜையித்" (நல்லது) தொடர் என்கின்றார்.
08. நாசுரிதீன் அல்பானி - இந்த ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களைத் தொட்டும் ஏழு வழிகளில் வந்துள்ளது
என்று கூறுகின்றார். மேலும் எவ்வித சந்தேகமுமின்றி இது நிரூபானமான ஹதீஸ் என்றும் கூறுகின்றார். எனவே இது ஹதீஸ்கலை அறிஞர்களிடம ஏற்றுக்கொள்ளப்பட்ட நபி மொழியாகும். இதனை ஒவ்வொரு முஸ்லிமும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
09. இமாம் திர்மிதி - இது ஹசன் தரத்திளுள்ளது என்று கூறுகின்றார்.
10. இப்னு வசீர் - முஆவியா அறிவித்த ஹதீஸ் ஸஹீஹ் என்கிறார். இதன் விபரங்களை "அல் அஹாதீஸுஸ் ஸஹீஹா - எண் : 204 இன் கீழ் பார்க்கலாம்."