உம்மத் 73 ஆகப் பிரியும் என்ற ஹதீஸ் பலவீனமானது அல்ல Posted on : 2013-07-19 Print

கேள்வி :
உம்மத் 73 ஆகப் பிரியும் என்ற ஹதீஸை ஹதீஸ்கலை அறிஞர்களில் ஒரு கூட்டத்தினர் "பலயீனமானது" என்று கூறியுள்ளதாக இமாம் இப்னு கதீர் கூறுவதாக சிலர் கூறுகின்றனர்.
 
 
பதில் :
ஒரு நபிமொழியை அது "பலயீனமானது" என்று கூறுபவர் அதற்கான சரியான காரணத்தை கூற வேண்டும். வெறுமனே இந்த ஹதீஸ் பலயீனமானது என்று கூறப்பட்டால் அது ஹதீஸ் கலையில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
 
 
இப்னு கதீர் தனது தப்ஸீரில் இந்த ஹதீஸ் பல வழிகளில் வந்துள்ளதாக கூறிவிட்டு "ஹதீஸ்கலை அறிஞர்கள் ஒரு கூட்டத்தினர் இதை பலயீனமானது என்று கூறியுள்ளனர்" என்றும், "இப்னு ஹஸ்ம் இது இட்டுக்கட்டப்பட்டது" என்றும் கூரியுள்ளதாகவும் கூறுகிறார். ஹதீஸ் "பலயீனம்" என்ற வாதத்திற்கும், 'இட்டுக்கட்டப்பட்டது'என்ற வாதத்திற்கும் இரு சாராரும் எவ்வித தகவலும் காட்டாததால், ஹதீஸ் கலையில் அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இமாம் இப்னு ஹஸ்மை பொறுத்த வரையில் ஹதீஸை சுண்டிப் பார்க்கும் விடயத்தில் மிகவும் கடும் போக்குடையவர் என்பது பிரபல்யமான விடயமாகும். அதே நேரத்தில் இந்த ஹதீஸ் 'பலயீனமானது' என்று சொன்னவர், யார் எந்த இடத்தில் இப்படி கூறியுள்ளார்கள் என்ற விபரமும் எந்த நூலிலும் காணப்படவில்லை.
 
 
மாறாக சுமார் 10 அறிஞர்கள் இதை ஸஹீஹ் என்று தான் கூறியுள்ளார்கள். எனவே இது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு ஹதீஸ் ர்ந்பதில் சந்தேகம் இல்லை.